ஒடிசா மாநிலத்தில் பிப்ரவரி மாதத்திலேயே வெயில் அதிகமாகி வெப்ப நிலை 40 டிகிரியைத் தொட்டது. 58 ஆண்டுகளில், இவ்வாறு வெப்ப நிலை அதிகரித்துள்ளது இதுவே முதல் முறையாகும். ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் கடந்த புதன்கிழமை 38 டிகிரி செல்சியசாக இருந்த வெப்ப நிலை, மறுநாள் 39 புள்ளி 4 டிகிரி செல்சியசாக உயர்ந்து, நேற்று 40 டிகிரியைத் தொட்டது. வெயில் அதிகரித்துள்ளதால் மாணவர்களுக்கான வகுப்பு நேரங்கள் மாற்றியமைக்கப்படுவதாக அம்மாநில கல்வித்துறை தெரிவித்துள்ளது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments