இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 வது டெஸ்ட் போட்டியை இந்தியா வென்றதையடுத்து, சொந்த மண்ணில் அதிக வெற்றிகளை பதிவு செய்த இந்திய கேப்டன் என்ற சாதனையை விராட் கோலி பெற்றார். இங்கிலாந்து இடையேயான 3வது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. சொந்த மண்ணில் 29 டெஸ்ட் போட்டிகளுக்கு தலைமை தாங்கிய விராட் கோலி 22 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று, முன்னாள் கேப்டன் தோனியின் சாதனையை முறியடித்தார். இதற்கு முன்பு தோனி சொந்த மண்ணில் 30 போட்டிகளுக்கு 21 போட்டிகள் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments