சர்வதேச வர்த்தக விமான சேவைக்கான தடையை மார்ச் 31 வரை நீட்டித்து விமானப்போக்குவரத்து ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் 23 முதல் கொரோனா பரவல் காரணமாக சர்வதேச விமானங்கள் நிறுத்தப்பட்டன. இந்தியாவில் இருந்து செல்லும் விமானங்களுக்கும் தடை நீட்டிக்கப்பட்டு வந்துள்ளது. சரக்கு விமானங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டதுடன், வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியர்கள் அழைத்துவரப்பட்டனர். அதே போல் இங்கிருந்த வெளிநாட்டவர்களும் அவரவர் நாடுகளுக்கு மூலமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments