துருக்கி நாட்டில் அடுக்கு மாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட நெருப்பிலிருந்து தப்பிக்க 3வது மாடியிலிருந்து தூக்கி வீசப்பட்ட குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பின. இஸ்தான்புல் நகரில் உள்ள எஸன்லர் மாவட்டத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. 3வது மாடியில் நெருப்பு பற்றி எரிந்த போது கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது. அப்போது அங்கிருந்த குடும்பத்தினர் தங்களின் குழந்தையைக் காப்பாற்றும் விதமாக 3வது மாடியிலிருந்து தங்களின் இரு குழந்தைகளையும் கீழே வீசினர். கீழே நின்றிருந்த மக்கள் இரு குழந்தைகளையும் லாவகமாகப் பிடித்து உயிரைக் காப்பாற்றினர். பின்னர் குழந்தைகளின் பெற்றோர்களும் காப்பாற்றப்பட்டனர்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments