மகாராஷ்டிராவில் கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவாக நேற்று ஒரே நாளில் 8 ஆயிரத்து 800 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை விடுத்துள்ள அறிக்கையில், இதுவரை 52 ஆயிரம் பேர் பெருந்தொற்றால் உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மாநில உணவு மற்றும் நுகர்வோர் துறை அமைச்சர் சாகன் புஜ்பால் உள்பட அவரது உதவியாளர்கள் 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 8 ஆயிரத்து 800 பேருக்கு கொல்லுயிரி பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதில் 80 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments