கட்சியின் மீது குறை சொல்வதை விட்டுவிட்டு சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறும் 5 மாநிலங்கள் மீது கவனம் செலுத்துமாறு அதிருப்தி தலைவர்கள் 23 பேருக்கு காங்கிரஸ் தலைமை அறிவுறுத்தியுள்ளது. ஜம்முவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட குலாம் நபி ஆசாத், கபில் சிபல் மணிஷ் திவாரி, ஆனந்த் சர்மா ராஜ்பாபர் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் காங்கிரஸ் கட்சி உரிய தலைமை இல்லாமல் பலவீனம் அடைந்திருப்பதாக விமர்சித்தனர். இதற்கு எதிர்வினையாற்றியுள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அதன் அதிகாரப்பூர்வமான டிவிட்டர் பக்கத்தில் உட்கட்சிப் பூசல்களை மறந்து தேர்தல் வெற்றிக்குப் பணியாற்றுமாறு அழைப்பு விடுத்துள்ளது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments