ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி மற்றும் பெல்ஜியத்தில் நடத்தப்பட்ட சோதனையில் பல பில்லியன் டாலர் மதிப்புள்ள 23 டன் கொகைன் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மாத தொடக்கத்தில் பராகுவேவிலிருந்து ஜெர்மனியின் ஹாம்பர்க் துறைமுகத்திற்கு வந்த ஐந்து கப்பல்களைச் சோதனையிட்ட அதிகாரிகள் அதிலிருந்த 16 டன் கொகைனைப் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் பெல்ஜிய துறைமுகமான ஆண்ட்வெர்ப் பகுதியில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து அங்கு மரக்கட்டைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 7 டன் கொகைன் கைப்பற்றப்பட்டது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments