மகாராஷ்டிர மாநிலத்தில் பள்ளிவிடுதியில் தங்கியிருந்த 229 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தின் விதர்பா பகுதியில் அமைந்துள்ள பள்ளி ஒன்று மீண்டும் திறக்கப்பட்டதையடுத்து, பல்வேறு மாவட்டங்களில் இருந்து 327 மாணவர்கள், விடுதிக்கு திரும்பிய நிலையில், அதில் 229 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அப்பகுதி தாசில்தார் அஜித் ஷெலார் தெரிவித்துள்ளார். மேலும் பள்ளி ஊழியர்கள் 4 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து விடுதி அமைந்துள்ள பகுதி கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments