திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 2021-22ஆம் ஆண்டு நிதியாண்டுக்காக இரண்டாயிரத்து 938 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற அறங்காவலர் குழு கூட்டத்தில், தேசிய மற்றும் தனியார் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளவற்றின் மீதான வட்டியில் இருந்து 533 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. உண்டியல் காணிக்கை மூலம் வரவு ஆயிரத்து 131 கோடி ரூபாயாக இருக்கும் என்றும்,லட்டு விற்பனை மூலம் 375 கோடி ரூபாய் வரை கிடைக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. விஐபிகளின் சிறப்பு டிக்கெட் மற்றும் ஆன்லைன் டிக்கெட் விற்பனை மூலம் 280 கோடி கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மனிதவள சேவைகளுக்கு ஆயிரத்து 308 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments