Ticker

6/recent/ticker-posts

Ad Code

“தமிழகத்தின் வருவாய் 18% குறையும்; அதேபோல் கடன் வாங்கும் அளவு...” தமிழக நிதித்துறை செயலர்

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்திய அரசு வரி உயர்த்தியதே காரணம் என தமிழக அரசின் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி நேர்மறையாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. தமிழக பொருளாதார வளர்ச்சி இந்தாண்டு 2.02% ஆக இருக்கும். மாநில மொத்த கடனானது 15ஆவது நிதிக்குழு அளித்த குறியீட்டிற்குள் தான் உள்ளது. தமிழகத்தின் வருவாய் 18% குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஒருபக்கம் வருவாய் குறைந்து, கூடுதல் செலவு ஏற்பட்டதால் வருவாய் பற்றாக்குறை அதிகரித்துள்ளது.

image

தமிழக அரசு அடுத்த நிதியாண்டில் கடன் வாங்கும் அளவும் குறையும். நடப்பு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு, புதிய வரி ஏதும் விதிக்காமல் வருவாய் கணக்கீடு இருக்கும். கடன் வாங்குவதில் ஜிடிபி மற்றும் 15ஆவது நிதிக்குழு அளித்த வரம்பை தமிழகம் மீறவில்லை. பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு மாநில அரசின் வரிவிதிப்பு காரணம் அல்ல. மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியை உயர்த்தியதுதான் காரணம். தமிழகத்தின் கடன் வாங்கும் அளவு, மத்திய அரசின் வரையறுக்கப்பட்ட அளவிற்குள்தான் இருக்கிறது” என்றார்.

மேலும், “டாஸ்மாக் மூலம் 2020 - 2021ஆம் நிதியாண்டில் 30 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளது” என்றார். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments