தமிழக தேர்தல் பணிக்காக எல்லை பாதுகாப்பு படையைச் சேர்ந்த ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட வீரர்கள் சென்னை வந்தடைந்தனர். அசாமில் இருந்து எழும்பூர் ரயில் நிலையத்திற்கு 9 கம்பெனிகளை சேர்ந்த வீரர்கள், மணிப்பூரில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு 11 கம்பெனிகளை சேர்ந்த வீரர்கள் என 20 கம்பெனிகளைச் சேர்ந்த ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட வீரர்கள் இன்று அதிகாலை வந்து சேர்ந்தனர். அவர்கள் ஓரிரு நாட்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புப் பணிக்கு அனுப்பப்படுவார்கள். மங்களூரில் இருந்து 92 துணை ராணுவப்படை வீரர்கள் தமிழக தேர்தல் பணிக்காக ஏற்கனவே சென்னை வந்தடைந்தனர்
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments