தமிழகத்தில், தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 1300 துணை ராணுவ படையினர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்தனர். தமிழகம் உட்பட 5 மாநிலங்களின் சட்டமன்ற தேர்தலுக்கான தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், அதற்கான தயாரிப்பு வேலைகளை செய்து வருகிறது. அதன் அடிப்படையில், மணிப்பூர் மாநிலம் அகர்த்தாவில் இருந்து 18 பெட்டிகளைக் கொண்ட சிறப்பு ரயிலில், சுமார் 1300 க்கும் மேற்பட்ட துணை ராணுவத்தினர் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக சென்னை வந்தடைந்தனர்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments