Ticker

6/recent/ticker-posts

Ad Code

வன்னியர்களுக்கு 10.5 சதவிகிதம் ஒதுக்கீடு..! பாமகவினர் வரவேற்பு

கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்குப் பத்தரை விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட முன்வடிவு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டதற்கு பாமக வரவேற்பு தெரிவித்துள்ளது. மிகப் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்குப் பத்தரை விழுக்காடும், சீர்மரபினருக்கு ஏழு விழுக்காடும், மற்ற சாதிகளுக்கு இரண்டரை விழுக்காடும் வழங்கலாம் என பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் பரிந்துரைத்தது. இதனை ஏற்று இடஒதுக்கீட்டுக் கொள்கையை நடைமுறைப்படுத்த அரசு தீர்மானித்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றில் தெரிவித்தார். இதுதொடர்பான சட்ட முன்வடிவு, சட்டப்பேரவையில் நேற்று குரல் வாக்கெடுப்பில் உறுப்பினர்களின் ஒருமித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. இதனை வரவேற்றும், முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தும் பாமகவினர் பல்வேறு இடங்களில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். இதனிடையே, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் நேரில் சந்தித்து, நன்றி தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 40 ஆண்டு கனவு நனவாகி உள்ளதாக குறிப்பிட்டார். துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் ஆகியோரையும் அன்புமணி சந்தித்து நன்றி தெரிவித்தார்.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments