Ticker

6/recent/ticker-posts

Ad Code

மேட்டூர் அணையின் உபரி நீரை 100 ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்

மேட்டூர் அணையின் உபரி நீரை 100 ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். மேட்டூர் அணையின் உபரி நீரை கால்வாய் மூலம் 100 ஏரிகளுக்கு நிரப்பும், 565 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்திற்கு கடந்தாண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிலையில், இத்திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.  நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், ஏப்ரல்1 முதல் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்தார். விவசாய தொழிலாளர்களுக்கு கான்கிரீட் வீடு கட்டித்தரப்படும் என்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, 5 ஆண்டுகளில் 2 முறை விவசாய பயிர்க்கடன் ரத்து செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments