60 வயது மேற்பட்டோருக்கும், தீவிர உடல் நல பாதிப்புடைய 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும் வரும் திங்கட்கிழமை முதல் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. நோயின் தன்மையை விவரிக்கும் ஒரு மருத்துவச் சான்றிதழ் இதற்கு அவசியமாகும். மார்ச் 1ம் தேதி முதல் முதியோருக்கு செலுத்தப்படுவது தொடங்கப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். முதல்கட்டமாக முன்களப் பணியாளர்கள் ,மருத்துவர்கள், காவல்துறையினர், ராணுவத்தினர் உள்ளிட்டோருக்குத் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி நடவடிக்கையில் சுமார் 27 கோடி பேருக்குத் தடுப்பூசி போடப்படும் என்றும் ஜவடேகர் கூறியுள்ளார். இதில் பத்துகோடிக்கும் அதிகமானோர் 60 வயதை கடந்தவர்கள் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments