ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் பொருட்களை வீட்டிலிருந்து ரயில்வே ஸ்டேஷனுக்கும், ரயில்வே ஸ்டேஷனில் இருந்து வீட்டுக்கும் பத்திரமாக எடுத்துச் செல்லும் புதிய முறையை இந்திய ரயில்வே நிர்வாகம் அறிமுகம் செய்ய உள்ளது. புக் பேக்கேஜ் என்ற அமைப்புடன் இணைந்து இதற்கான செயலியை உருவாக்கிட ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. என்ட் டூ என்ட் எனப்படும் இந்தச் சேவை மூலம் பயணிகள் தங்கள் சுமைகளை சுமந்து செல்லும் அவசியம் இருக்காது என்றும் ரயில்வே துறை கருதுகிறது. IRCTC மூலம் இதற்கான ஏற்பாடுகளைச் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவால் முடக்கப்பட்ட ரயிலில் உணவு வழங்கும் சேவை விரைவில் குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் தொடங்கும் என IRCTC அறிவித்துள்ளது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments