டீசல் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தியும், பேருந்து கட்டணத்தை உயர்த்த அனுமதிக்கக் கோரியும் மேற்கு வங்கத்தில் தனியார் பேருந்துகள் அறிவித்த வேலைநிறுத்தம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் டீசல் விலையைக் கட்டுப்படுத்த அதற்கு ஜிஎஸ்டி வரி விதிக்க வேண்டும் என்றும் அம்மாநில தனியார் பேருந்து உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதாக மாநில அரசு கூறியதையடுத்து இன்று முதல் 3 நாட்கள் நடக்கவிருந்த வேலை நிறுத்தத்தை ஒத்தி வைப்பதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments