Ticker

6/recent/ticker-posts

Ad Code

ஓ.டி.டியில் வெளியாகிறது விஜய்யின் மாஸ்டர்..! தேதி அறிவிப்பு!

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மாஸ்டர் திரைப்படம் வரும் 29 ஆம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கொரோனா நோய் தொற்று காரணமாக பல மாதங்களாக திரைப்படங்கள் இதுவும் திரையரங்கில் வெளியாகாமல் இருந்து வந்தது. இதனால் சினிமா துறை பெரிய பாதிப்பிற்கு உள்ளானது. மேலும் திரையரங்குகள் திறக்கும் வரை பொறுமை காக்க முடியாது என புதிதாக உருவான படங்கள் அனைத்தும் ஓடிடி பக்கம் திரும்பியது. அதில் பெரும்பாலான படங்கள் பெரும் வரவேற்பை பெறவில்லை என்றாலும் சூரரைப்போற்று போன்ற சில படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

image

இதனால் இனி மக்கள் திரையரங்குகள் பக்கம் வரத் தயங்குவார்கள் என்ற விமர்சனமும் எழுந்தது. இது ஏற்கனவே நலிவடைந்துகிடந்த சினிமா தொழிலாளர்கள் மத்தியில் இடியை இறக்கியது. அதனை போக்கும் வகையில் கடந்த பொங்கல் அன்று விஜய் மற்றும் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி திரையரங்குகளில் வெளியான மாஸ்டர் திரைப்படம் அமோக வெற்றியை பதிவு செய்து வருகிறது. கொரோனா அச்சம் இன்னமும் நீடித்தாலும் கூட எதிர்பார்ப்பைவிட பிரம்மாண்ட வெற்றியை மாஸ்டர் திரைப்படம் பெற்று வருகிறது.

இந்நிலையில் வசூல் சாதனை படைத்துள்ள மாஸ்டர் திரைப்படம் வரும் 29 ஆம் தேதி ஓடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments