இலங்கைக்கு இந்தியா அனுப்பிய கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்க விளைவுகள் இல்லை என்று அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இலங்கைக்கு இந்தியா 5 லட்சம் டோஸ்கள் கோவிஷீல்டு தடுப்பூசியை நன்கொடையாக வழங்கியது. இதைத்தொடர்ந்து அங்கு கடந்த இரு தினங்களாக தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த தடுப்பூசியால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை என இலங்கை சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தடுப்பூசிகளை இலவசமாக வழங்கியதற்காக இந்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் இலங்கை சுகாதாரத்துறை அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி நன்றி தெரிவித்து உள்ளார்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments