Ticker

6/recent/ticker-posts

Ad Code

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் எண்ணெய் ஆலையில் நள்ளிரவில் பெரும் தீவிபத்து - பல லட்ச ரூபாய் மதிப்பிலான எண்ணெய் எரிந்து நாசம்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள எண்ணெய் ஆலையில் நள்ளிரவில் ஏற்பட்ட தீவிபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான எண்ணெய் எரிந்தது. விசாகப்பட்டினம் அகனம்புடி தொழிற்பேட்டையில் உள்ள பாரமவுன்ட் அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் எண்ணெய் ஆலையில் நள்ளிரவில் தீப்பிடித்தது. கிடங்கில் பெட்டிகளிலும், டின்களிலும் அடுக்கி வைத்திருந்த எண்ணெயில் தீப்பற்றிக் கொழுந்துவிட்டு எரிந்ததால் அந்தப் பகுதியே செந்நிறமாகக் காட்சியளித்தது. தகவல் அறிந்ததும் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீரைப் பீய்ச்சியடித்தனர். எண்ணெயில் பற்றிய தீ என்பதால் தண்ணீருக்குக் கட்டுப்படாமல் தொடர்ந்து பற்றி எரிந்தது. இரவில் தொழிலாளர்கள் யாரும் இல்லாததால் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது. அதே நேரத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான எண்ணெய் எரிந்து வீணானது.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments