தைப்பூசத்தையொட்டி சமயபுரம், மாங்காடு உள்ளிட்ட கோவில்களில் தெப்பத் திருவிழா விமர்சையாக நடைபெற்றது. சென்னை மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் அம்மன் அருள்பாலித்தார். கொரோனா பரவல் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழாவின் 9ஆம் நாளான நேற்று அம்மன் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 9ஆம் நாளான நேற்று அம்மன் வீதிஉலாவிற்குப் பின் நடைபெற்ற தெப்பத்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். மன்னார்குடி அருகே வடுவூர் கோதண்டராம சுவாமி கோவிலில், முக்கிய வீதிகள் வழியாக சுவாமி வலம் வந்து சரயுபுஷ்கரணி தெப்பத்தில் எழுந்தளினார். நாதஸ்வர இசை முழங்க, குளத்தில் 3 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments