Ticker

6/recent/ticker-posts

Ad Code

ஆன்லைன் ரம்மி தொடர்பான விளம்பரங்களில் நடித்தது தொடர்பாக கோலி, தமன்னா, அஜூ வர்கீஸ் விளக்கம் அளிக்க நீதிமன்றம் நோட்டீஸ்

ஆன்லைன் ரம்மி தொடர்பான விளம்பரங்களில் நடித்தது தொடர்பாக விளக்கம் அளிக்கக் கேட்டு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, நடிகை தமன்னா மற்றும் நடிகர் அஜூ வர்கீஸ் ஆகியோருக்கு கேரள உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளுக்கு தடை விதிக்கக் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதில் ஆன்லைன் ரம்மி விளையாட்டு சட்டவிரோதமானவை என்றும், பிரபலங்களாக இருப்பவர்கள் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், போலி வாக்குறுதிகளுடன் பார்வையாளர்களை ஈர்த்ததாகவும் அந்த வழக்கில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்து விளக்கம் அளிக்குமாறு கோலி, தமன்னா, அஜூ வர்கீஸ் ஆகியோருக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments