இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் சவுரவ் கங்குலிக்கு இரத்தக் குழாய் அடைப்பைச் சரிசெய்வதற்காக இன்று கூடுதல் ஸ்டென்ட் பொருத்தப்பட உள்ளது. சவுரவ் கங்குலி நெஞ்சுவலி காரணமாக இம்மாதத் தொடக்கத்தில் கொல்கத்தா உட்லேண்ட்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு இதயத்தில் இரத்தக் குழாய் அடைப்பைச் சரிசெய்ய ஆஞ்சியோபிளாஸ்டி மூலம் ஸ்டென்ட் பொருத்தப்பட்டது. 5 நாட்கள் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய அவருக்கு நேற்று மீண்டும் நெஞ்சு வலி ஏற்பட்டதால் கொல்கத்தா அப்போலோ மருத்துவமனையில் பரிசோதனை செய்துகொண்டார். அப்போது அவருக்கு இரத்தக் குழாய்களில் மேலும் இரு இடங்களில் அடைப்பு உள்ளது கண்டறியப்பட்டது. அதைச் சரிசெய்ய இன்று உட்லேண்ட்ஸ் மருத்துவமனையில் அவருக்குக் கூடுதல் ஸ்டென்ட் பொருத்தப்பட உள்ளது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments