ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வனவிலங்குகளின் தோல்கள் மற்றும் உடல் பாகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அனந்த்நாக் மாவட்டத்தில் வனவிலங்கு குற்றத் தடுப்பு மைய அதிகாரிகள் நடத்திய சோதனையில் சிறுத்தை தோல்கள், கரடிகளின் உடலுறுப்புகள் மற்றும் கஸ்தூரி மான்களின் வாசனை சுரப்பிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் ஜம்மு பகுதியில் உள்ள மன்வாலில் என்ற இடத்தில் சிறுத்தை மற்றும் இமாலய பழுப்புக் கரடிகளின் உடல் உறுப்புகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தக் கடத்தல் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இருவரும் சட்டவிரோத வனவிலங்குகள் வர்த்தகத்தில் இணைந்து செயல்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments