Ticker

6/recent/ticker-posts

Ad Code

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று கூடுகிறது

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் இன்று தொடங்குகிறது. நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று கூடுகிறது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்குகிறது. காலை 11 மணிக்கு, மக்களவை, மாநிலங்களவை கூட்டு கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை ஆற்றுகிறார். இந்த உரையில் எல்லையில் சீன அத்துமீறல் விவகாரம், வேளாண் சட்டங்கள், கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டம், தடுப்பூசிகளை உருவாக்குவதில் இந்தியாவின் சாதனை, நாட்டின் பொருளாதார நிலவரம், ராணுவம் உள்ளிட்ட துறைகளில் இந்தியாவின் சுய சார்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு அமர்வுகளாக நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரில், கொரோனா கால வழிகாட்டு நெறிமுறைகள் கடுமையாகப் பின்பற்றப்பட உள்ளன. இதனிடையே, காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்டுகள்,தேசிய வாத காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி, சிவசேனா,திரிணாமுல், சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், முஸ்லீம் லீக், மதிமுக உள்ளிட்ட 16 கட்சிகள் குடியரசுத் தலைவர் உரையைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. இதேபோன்று ஆம் ஆத்மி, சிரோமணி அகாலி தளம் ஆகிய கட்சிகளும் குடியரசுத் தலைவர் உரையை புறக்கணிக்க முடிவு செய்துள்ளன. 2021-22 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை வரும் ஒன்றாம் தேதி நிதியமைச்சர் தாக்கல் செய்கிறார்.இந்த முறை பட்ஜெட் தாக்கல், வழக்கமான காகித வடிவத்தில் இருக்காது. எனவே அனைத்து பட்ஜெட் ஆவணங்கள், பொருளாதார ஆய்வு அறிக்கை ஆகியவற்றின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிகள் சபையில் வைக்கப்பட்ட உடன், இணையத்தில் கிடைக்கும் என்று மக்களவை செயலகம் அறிவித்துள்ளது. நடப்பு கூட்டத் தொடரில் தலைநகர் மண்டலம் மற்றும் தொடர்பான பகுதிக்கு காற்று மேலாண்மை ஆணையம் அமைத்தல், ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு அவசரச் சட்டம் உள்ளிட்டவை மசோதாக்களாக தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments