சையத் முஸ்டாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், தமிழக அணி, இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. குஜராத் மாநிலம் அவுரங்காபாத்தில் நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் தமிழக அணி, ராஜஸ்தான் அணியை எதிர் கொண்டது. டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த ராஜஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது. 155 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தமிழக அணி, 8 பந்துகள் மீதம் இருந்த நிலையில் 3 விக்கெட் இழப்புக்கு 158 ரன் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தமிழக வீரர் அருண் கார்த்திக் 89 ரன் குவித்தார். மற்றொரு வீரர் முகமது 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மற்றொரு அரையிறுதியில் புனேவை வீழ்த்திய பரோடா அணியை இறுதிப் போட்டியில் தமிழக அணி சந்திக்க உள்ளது
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments