சீரம் நிறுவனம் தயாரித்த கோவிஷீல்டு கொரோனா தடுப்பு மருந்துகள் மும்பையில் இருந்து விமானத்தில் பக்ரைன், இலங்கை நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. புனேயின் சீரம் நிறுவனம் தயாரித்த கோவிஷீல்டு, ஐதராபாத் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் ஆகிய தடுப்பு மருந்துகள் இந்தியாவில் முன்களப்பணியாளர்களுக்குச் செலுத்தப்பட்டு வருகின்றன. இதையடுத்து நல்லெண்ண அடிப்படையில் அண்டை நாடுகளுக்கும் நட்பு நாடுகளுக்கும் இலவசமாகத் தடுப்பு மருந்துகள் அனுப்பப்பட்டு வருகிறது. வங்கதேசம், நேபாளம், மாலத்தீவு நாடுகளுக்கு ஏற்கெனவே மருந்து அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் சீரம் நிறுவனம் தயாரித்த கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் மும்பையில் இருந்து பக்ரைனுக்கும், இலங்கைக்கும் விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டன.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments