நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட் மக்கள் அனைவரின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதாக இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்திருப்பதாகவும் கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மினி பட்ஜெட்களின் தொடர்ச்சியாக இருக்கும் என்றும் மோடி தெரிவித்துள்ளார். பட்ஜெட்டில் ஏராளமான சலுகைகள் இருக்கும் என்று சூசகமாக பிரதமர் மோடி குறிப்புணர்த்தியுள்ளார். கடந்த ஆண்டில் கொரோனா பேரிடர் காலத்தில் சிறிய மினி பட்ஜெட்களில் நிதித்தொகுப்புகள் அறிவிக்கப்பட்டன.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments