இந்தியா உள்ளிட்ட இந்தோ - பசிபிக் நாடுகளுடனான உறவு தொடரும் என்றும் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் அரசின் கொள்கைகளை தொடர உள்ளதாகவும் அமெரிக்காவின் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுலிவான் கூறியள்ளார். அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா அடங்கிய, 'குவாட்' எனப்படும் கூட்டமைப்பு, 2017ல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில், சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், இந்த கூட்டமைப்பு, போர் பயிற்சிகளில் ஈடுபட்டு உள்ளது. பல்வேறு துறைகளிலும், இந்த நாடுகள் இணைந்து செயலாற்றி வருகின்றன. இந்தோ - பசிபிக் பிராந்தியம் தொடர்பாக, புதிய அதிபர் ஜோ பைடனின் நிர்வாகத்தின் கொள்கை, இந்த கூட்டமைப்பின் அடிப்படையிலேயே இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments