சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று முதல், பிரசாரத்தை தொடங்குகிறார். "உங்கள் தொகுதியில் ஸ்டாலின் " என்ற பெயரில் திருவண்ணாமலையில் இருந்து காலை பிரச்சாரத்தை தொடங்கும் அவர், தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். மொத்தம் 30 நாட்கள் பிரச்சாரம் மேற்கொள்ளும் அவர், 234 தொகுதிகளிலும் கலந்துரையாடல் கூட்டங்களிலும் பங்கேற்கிறார். இந்த கூட்டங்களில் அந்தந்த தொகுதியை சேர்ந்த கிராமம் மற்றும் வார்டு பகுதிகளை சேர்ந்த மக்கள் தங்கள் கோரிக்கைகளை ஸ்டாலினிடம் வழங்க உள்ளனர். பின்னர் அந்த மனுக்கள் அனைத்தும் பெட்டியில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட உள்ளன.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments