Ticker

6/recent/ticker-posts

Ad Code

நாடாளுமன்றத்தில் நாளை மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல்

கொரோனா காலத்திற்கு பிறகு முழு அளவிலான நாட்டின் பட்ஜெட் நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகள் இருக்கும் என்றும் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கேற்ப இருக்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுவரை தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்களில் இருந்து இந்த நிதியாண்டின் பட்ஜெட் வித்தியாசமானது. கொரோனா பாதித்த நிலையில் எட்டு மாதங்களுக்கும் மேலாக நாடு மிகப்பெரிய ஊரடங்கை சந்தித்த பின் தாக்கல் செய்யப்படுவதால், கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்த பட்ஜெட் இருக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். இதனால் வழக்கமான தனி நபர் மாத ஊதியத்துடன் தொழில் வருவாயைத் தனியாகப் பிரிப்பதில் நிதியமைச்சகத்திற்கு புதிய சிக்கல் உருவாகியுள்ளது. இதனால் ஊதியத்தில் பிடித்தத்தை அதிகரித்து பிரச்சினைக்குத் தீர்வுகாண மத்திய அரசு முயற்சிக்கலாம் என்று கூறப்படுகிறது. மாதாந்திர ஊதியம் பெறுவோருக்கான உச்சவரம்பு உயர்த்தப்படலாம் என்றும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கார்ப்பரேசன் வரி குறைப்பு ,காப்பீடு திட்டங்கள் அறிவிப்பு என பொருளாதார மீட்பு நடவடிக்கைகளை மத்திய அரசு கடந்த ஆண்டில் அறிவித்துள்ள நிலையில், இந்த பட்ஜெட் மேலும் பல்வேறு சலுகைகளையும் வரிக்குறைப்புகளையும் கொண்டு வரும் என்று கருதப்படுகிறது. நலிவுற்ற சிறுதொழில்களுக்கான பல்வேறு திட்டங்களும் அறிவிக்கப்படலாம். கடந்த ஆண்டில் சிறிய அளவிலான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதில் விவசாயிகள், சிறுதொழில் செய்வோருக்கு கடனுதவி உள்ளிட்ட பல லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாகவே இந்த முழுமையான பட்ஜெட்டும் இருக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments