தலைநகர் டெல்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணியின் போது ஏற்பட்ட வன்முறை தொடர்பாக 38 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 84 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், வன்முறை தொடர்பாக செல்போன் மற்றும் சிசிடிவிக்களில் பதிவான 1700 வீடியோக்கள் பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப் பெற்றுள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிங்கு, காசியாபூர், திக்ரி ஆகிய எல்லைப் பகுதிகளில், இன்று நள்ளிரவு வரை, இன்டர்நெட் சேவை துண்டிப்புத் தொடரும் என மத்திய அரசு கூறியுள்ளது. பொது அமைதி மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments