அமெரிக்காவில் புதிதாக பதவியேற்றுள்ள வெளியுறவு அமைச்சர் அந்தோனி பிலின்கினுடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தொலைபேசி வாயிலாக பேச்சு நடத்தினார். இந்திய அமெரிக்க கூட்டுறவையும் நட்பையும் முன்னேற்றவும் இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் அமைதியை நிலை நிறுத்தவும் இருவரும் உறுதி அளித்தனர். இருநாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு உடன்படிக்கைகளை வரவேற்ற அமெரிக்கா, இரு நாட்டு மக்களும் நெருக்கமான தொடர்புடன் இருக்க வேண்டும் என்று கோரியுள்ளது. புதிதாக பொறுப்பேற்ற ஜோ பைடனின் அமைச்சர்கள் இந்திய அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments