Ticker

6/recent/ticker-posts

Ad Code

போலி கற்களை நவரத்தின கற்கள் என கூறி விற்க முயன்ற மோசடி கும்பல் கைது

பொள்ளாச்சியில் போலியான நவரத்தின கற்களை விற்க முயன்ற 22 பேர் கொண்ட மோசடி கும்பலை போலீசார் கைது செய்தனர். பொள்ளாச்சி பெருமாள் செட்டி வீதியில் செல்போன் கடை நடத்தி வரும் ரியாஸ் என்பவரை தொடர்பு கொண்ட 4 பேர், பழைய 500,1000 ரூபாய் நோட்டுகளை கொடுத்தால், அதற்கு 10 மடங்கு புதிய ரூபாய் நோட்டுகளை தருவதாக கூறி மோசடி செய்ய முயன்றுள்ளனர். போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தியதில், போலியான கற்களை நவரத்தின கல், அதிர்ஷ்ட கல் என பொதுமக்களை ஏமாற்றி மோசடி செய்பவர்கள் என்பது தெரியவந்தது. இதனையடுத்து 4 பேரையும் கைது செய்த போலீசார், பொள்ளாச்சி பாலக்காடு ரோடு நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பின் புறம் பதுங்கியிருந்த கேராளாவை சேர்ந்த அவர்களது கூட்டாளிகள் 18 பேரையும் கைது செய்தனர்.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments