Ticker

6/recent/ticker-posts

Ad Code

மருத்துவமனையில் இருந்து சசிகலா விடுவிக்கப்படுவது எப்போது? பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை இன்று முடிவு

கொரோனா அறிகுறிகள் நீங்கி, சசிகலா உடல்நிலை சீராக உள்ளதால் அவரை டிஸ்சார்ஜ் செய்வது குறித்து பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை இன்று முடிவு செய்ய உள்ளது. சசிகலாவுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, ரத்தத்தில் ஆக்சிஜன் செறிவு உள்ளிட்டவை சீராக இருப்பதாக அம்மருத்துவமனை தெரிவித்துள்ளது. தொடர்ந்து 10ஆவது நாளாக அவர் மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார். நன்கு விழிப்போடு, உதவியுடன் எழுந்து நடமாடி வருகிறார். எனவே, சசிகலாவை பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை டிஸ்சார்ஜ் செய்ய உள்ளது. அதற்கான தேதி மற்றும் நடைமுறை இன்று முடிவு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments