சசிகலாவோ அமமுக கட்சியோ அதிமுகவில் இணைக்கப்பட வாய்ப்பே இல்லை என்பது 100 சதவீதம் திட்டவட்டமான விஷயம் என்று, அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன், சசிகலா குறித்து கூறிய கருத்து மனிதாபிமான அடிப்படையிலானது என்றும், சசிகலா அரசியலில் ஈடுபடக் கூடாது என அவர் கூறியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். அதிமுக தலைமையில் அமைந்துள்ள மெகா கூட்டணிக்கு, தேர்தல் நெருங்கும்போது மேலும் சில கட்சிகள் வர வாய்ப்பு உள்ளதாகவும் ஜெயக்குமார் தெரிவித்தார். கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து உரிய நேரத்தில் அதிமுக தலைமையிடமிருந்து அறிவிப்பு வெளியாகும், பாமகவுடனான கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் அமைச்சர் பதிலளித்தார். அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைந்துள்ளது. தேர்தல் நெருக்கும் போது மேலும் சில கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வர வாய்ப்பு உள்ளது என கூறினார்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments