இந்தியாவின் கொரோனா தடுப்பூசி உற்பத்தி திறன் உலகில் உள்ள மிகச் சிறந்த சொத்தாக கருதுகிறோம் என்று ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குடரெஸ் தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் பேசிய அவர், இந்தியாவின் இந்த திறன் முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை உலகம் புரிந்து கொள்கிறது என்று நம்புவதாக தெரிவித்தார். உலகளாவிய தடுப்பூசி பிரச்சாரம் சாத்தியமா என்பதை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் இந்தியாவில் இருக்கிறது என்றார்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments