சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளதாக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை தெரிவித்துள்ளது. இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சசிகலாவுக்கு கொரோனா பாதிப்புகள் குறைந்து அறிகுறிகள் இல்லாத கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றும், அவர் இயற்கையாக சுவாசிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. ரத்தத்தில் சர்க்கரை மற்றும் ஆக்சிஜன் அளவு சீராக இருப்பதாகக் கூறியுள்ளது. சசிகலாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், மருத்துவர்கள் தொடர்ந்து அவரை கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments