Ticker

6/recent/ticker-posts

Ad Code

தூதரகம் முன் குண்டு வெடிப்பு: உஷார் நிலையில் விமான நிலையங்கள்... பாதுகாப்பு அதிகரிப்பு..!

டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, நாடு முழுவதும் விமான நிலையங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தின் அருகில் நேற்று மாலை குறைந்த சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த 3 கார்களின் கண்ணாடிகள் சேதமடைந்தன. தேசிய பாதுகாப்பு படையினருடன், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளும் இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர். குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள இஸ்ரேல் துணைத் தூதரகத்தின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது. இதனிடையே, டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த, இஸ்ரேல் நாட்டுத் தூதர் ரான் மால்கா, குற்றவாளிகளின் நோக்கத்தை கண்டறிய, இந்திய அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாகக் குறிப்பிட்டார். குண்டுவெடிப்பு நிகழ்ந்த நிலையில்,இஸ்ரேல் வெளியுறவு அமைச்சருடன் அமைச்சர் ஜெய்சங்கர் தொலைபேசியில் பேசினார். அப்போது இஸ்ரேல் மக்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்கப்படும் என அவர் உறுதி அளித்தார். இந்திய அதிகாரிகள் மீது முழு நம்பிக்கை இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதான்யாகு தெரிவித்தார். இப்பிரச்சினை தொடர்பாக அவர் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவலுடன் தொலைபேசியில் உரையாடி, இஸ்ரேல் மக்களுக்கு பாதுகாப்பு வழங்கும்படி கேட்டுக் கொண்டார். சம்பவ இடத்தில் இஸ்ரேல் தூதரக அதிகாரிகளுக்கு எழுதப்பட்ட எச்சரிக்கை கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர். கண்காணிப்பு கேமராவில் தூதரகம் அருகே ஒருவர் பார்சல் ஒன்றை வீசியெறியும் காட்சியும் பதிவாகியுள்ளதையடுத்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். 

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments