புதுச்சேரி யூனியன் சட்டப்பேரவைக்கு நியமன எம்.எல்.ஏவாக பாரதிய ஜனதாவைச் சேர்ந்த விக்ரமனை நியமித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி யூனியனில் 30 சட்டப்பேரவை உறுப்பினர்களும், 3 நியமன எம்.எல்.ஏக்களும் உள்ளனர். நியமன எம்.எல்.ஏக்களாக பாரதிய ஜனதாவைச் சேர்ந்த சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோர்களுக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்நிலையில் நியமன எம்.எல்.ஏ சங்கர் உடல்நலக்குறைவு காரணமாக காலமானதையடுத்து விக்ரமன் நியமிக்கப்பட்டுள்ளார்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments