Ticker

6/recent/ticker-posts

Ad Code

அனைத்து இந்தியர்களுக்கும் விசா வழங்கப்படும் என ரஷ்ய தூதரகம் அறிவிப்பு

இந்திய குடிமக்கள் யாவருக்கும் விசா வழங்கும் நடவடிக்கையை ரஷ்யா மீண்டும் தொடங்கியுள்ளது. மாணவர்கள் விசா உள்பட அனைத்து வகை விசாக்களும் வழங்கப்படுவதாக டெல்லியில் உள்ள ரஷ்ய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட சில நாடுகளுடன் விமான சேவையை மீண்டும் தொடங்கவும் ரஷ்யா கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்தது. மாஸ்கோவில் இருந்து டெல்லிக்கும் டெல்லியில் இருந்து மாஸ்கோவுக்கும் தற்போது வாரம் இருமுறை விமான சேவை இயக்கப்பட இருக்கிறது. விசாவுக்கு விண்ணப்பம் செய்வோர் தேவையான ஆவணங்களை ரஷ்ய தூதரக இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். அத்துடன் கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் என்ற சான்றிதழ் பெற்றும் பதிவேற்றம் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments