வடகொரியாவின் தலைவரின் சகோதரரான கிம்ஜாங் நம் கொலைசெய்யப்பட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தயாரிக்கப்பட்டுள்ள இந்த புதிய ஆவணப்படம் அநத்க் கொலை மற்றும் அதன் பின்னணியில் இருந்த இரண்டு இளம் பெண்களைக் குறித்த மூடுதிரைகளை விலக்குகிறது. கோலாலம்பூர் விமான நிலையத்தில் கிம் கொல்லப்படும் காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியது. உலகம் முழுவதுமே அந்த வீடியோவைப் பார்த்துவிட்ட போதும் இன்னும் துலங்காத மர்மங்கள் உள்ளன. அமெரிக்க இயக்குனர் ரையன் வைட் இரண்டரை ஆண்டுகள் இந்த வழக்கை ஆய்வு செய்து அசாசின்ஸ் என்ற இந்தப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படம் இன்றுவெளியாகிறது.அவர் முகத்தில் விஷம் பூசிக் கொன்றதாக அந்த இரண்டு பெண்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்படலாம். அது வெறும் பிராங்க் ஷோ என நினைத்து செய்ததாக அந்தப் பெண்கள் தங்கள் தரப்பை வாதாடி வருகின்றனர் .இத்திரைப்படம் அந்தப் பெண்களை ஆவணப்படுத்தியுள்ளது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments