பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்ட பேராசிரியர்மீது சென்னை ஐஐடி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட மாணவி புகார் எழுப்பியுள்ளார்.
சென்னை ஐஐடியில் சிவில்துறையை சேர்ந்த பேராசிரியர் மாதவ்குமார் தன்னிடம் பாலியல்ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்டதாக ஆராய்ச்சி மாணவி ஒருவர் ஐஐடி நிர்வாகத்தின் பாலியல் புகார்களை விசாரிக்கும் கமிட்டியிடம் கடந்த ஆண்டு புகார் அளித்திருந்தார். கமிட்டி மேற்கொண்ட விசாரணையில் மாதவ்குமார் மீதான குற்றச்சாட்டு உறுதியானது.
இதையடுத்து, அவரை உதவிப் பேராசிரியராக பதவி இறக்கம் செய்வது, 5 ஆண்டுகளுக்கு மாணவிகளுக்கு பாடம் எடுக்க தடை விதிப்பது என்பன உள்ளிட்ட நான்கு பரிந்துரைகளை அமல்படுத்த ஐஐடி நிர்வாகத்திடம் அறிவுறுத்தப்பட்டது. ஆனால், ஐஐடி நிர்வாகம் அந்த பரிந்துரைகளின்படி பேராசிரியர் மாதவ்குமார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மாணவி புகார் அளித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments