நள்ளிரவுக்குள் டெல்லி எல்லையை காலி செய்யும்படி விவசாயிகளுக்கு கெடு விதிக்கப்பட்ட நிலையில், உயிரே போனாலும் ஒரு அங்குலம் கூட நகர மாட்டோம் என விவசாயிகள் தெரிவித்தனர். இதனால் நேற்றிரவு அங்கு ஏராளமான வாகனங்களில் போலீசாரும் துணை ராணுவப்படையினரும் போராட்டம் நடைபெறும் பகுதிகளில் குவிக்கப்பட்டனர். சில ஆம்புலன்சுகளும் அப்பகுதிக்கு வந்து தயார் நிலையில் நிறுத்தப்பட்டன. விவசாயிகள் கலைந்து போகும்படி போலீசார் ஒலிபெருக்கிகள் மூலம் எச்சரிக்கை விடுத்தனர். ஆயினும் விடிய விவசாயிகள் அங்கிருந்து நகராமல் அமைதியுடன் தர்ணாவில் ஈடுபட்டனர். நள்ளிரவுக்கு மேல் சூழ்நிலையை ஆராய்ந்த மாவட்ட காவல்துறை உயரதிகாரிகள் இப்போதைக்கு போராட்டம் தொடர அனுமதிப்பதாக தெரிவித்தனர்.பெரிய சட்டம் ஒழுங்கு பிரச்சினை இல்லை என்பதால் கூடுதலாக குவிக்கப்பட்ட படைகள் திரும்ப அழைக்கப்பட்டன.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments