நாகர்கோயில் - பெங்களூர் இடையே மதுரை வழியாக மேலும் ஒரு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. நாளை மாலை 5 மணி அளவில் பெங்களூருவில் இருந்து புறப்படும் இந்த ரயில் மதுரைக்கு மறுநாள் அதிகாலை 3 மணி அளவில் வந்து சேரும். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு காலை 8.20 மணி அளவில் நாகர்கோவில் செல்லும். மறுமார்க்கத்தில் இந்த சிறப்பு ரயில் வருகிற 1ந்தேதி முதல் நாகர்கோவிலில் இருந்து இரவு 07.10 மணிக்கு புறப்பட்டு, மதுரைக்கு இரவு 11.55 மணிக்கு வந்து சேரும். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மறுநாள் காலை 09.20 மணிக்கு பெங்களூர் சென்று சேரும். இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் துவங்குகிறது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments