Ticker

6/recent/ticker-posts

Ad Code

மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு சம வாய்ப்பு வழங்கவே இடஒதுக்கீடு- 7.5 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதில் மனு

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் சம வாய்ப்பு வழங்கவே மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கியதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. மருத்துவப் படிப்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு சட்டம் இயற்றியது. இதனை எதிர்த்து, தனியார் பள்ளி மாணவர்கள் சிலரும், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் இடஒதுக்கீடு வழங்கக் கோரி கத்தோலிக்க கல்விச் சங்கமும் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கி அரசு பள்ளி மாணவர்களுக்கு சமவாய்ப்பு வழங்கும் நோக்கில் சட்டம் இயற்றப்பட்டது என்றும், விதிமீறல் இல்லாதபோது அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் குறிப்பிட்டது.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments