Ticker

6/recent/ticker-posts

Ad Code

நாடு முழுவதும் இன்று 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் துவக்கி வைத்தார்

நாடு முழுவதும் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் இன்று நடைபெறுகிறது. இதற்காக நாடு முழுவதும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த திட்டத்தை, குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன், கடந்த பத்து ஆண்டுகளில் போலியோ பாதிப்பற்ற நாடாக இந்தியா விளங்குகிறது என்று குறிப்பிட்டார். தமிழ்நாட்டில், 43 ஆயிரத்து 51 மையங்களில், சுமார் 71 லட்சம் குழந்தைகளுக்கு, போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுவதால் இன்று கொரோனா தடுப்பூசி போடும் மையங்கள் செயல்படாது என அரசு அறிவித்துள்ளது.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments