Ticker

6/recent/ticker-posts

Ad Code

மேலும் 3 ரபேல் விமானங்கள் வருகை… இந்திய விமானப்படையின் வலிமை அதிகரிப்பு..!

பிரான்ஸ் நாட்டிலிருந்து மேலும் 3 ரபேல் விமானங்கள் வந்தடைந்ததாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. இதுவரை 11 ரபேல் ரக விமானங்கள் இந்தியா வந்துள்ளன. இந்திய விமானப்படைக்கு வலிமை சேர்க்கும் வகையில் பிரான்ஸ் நாட்டிலிருந்து ரபேல் ரக போர் விமானங்களை வாங்க இந்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. 36 ரபேல் ரக போர் விமானங்கள் வாங்க, 59 ஆயிரம் கோடி ரூபாயில், 2016ம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதன் முதல் கட்டமாக, ஐந்து போர் விமானங்கள், கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியா வந்து சேர்ந்தன. இதன் இரண்டாவது தொகுதியாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 3 விமானங்கள் பிரான்ஸ் நாட்டிலிருந்து இந்தியா வந்தடைந்தன.  இந்நிலையில் 3 வது கட்டமாக மேலும் 3 ரபேல் ரக போர் விமானங்கள் நேற்றிரவு இந்தியா வந்தன. சுமார் 7 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் இடை நில்லாமல் வந்த இந்த விமானங்களுக்கு ஐக்கிய அரபு எமிரேட்சின் MRTT எனப்படும் நடுவானில் எரிபொருள் நிரப்பும் விமானம் எரிபொருளை ரபேல் விமானங்களுக்கு வழங்கியது. பிரான்சில் உள்ள இஸ்ட்ரெஸ் விமானத் தளத்திலிருந்து புறப்பட்ட இந்த விமானங்கள் இந்தியாவில் விமானப்படைக்குச் சொந்தமான தளத்தில் பாதுகாப்பாக வந்திறங்கியதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.  இதுகுறித்து விமானப்படை விடுத்துள்ள அறிக்கையில், ரபேல் விமானங்கள், இந்திய விமானப்படைக்கு கூடுதல் பலத்தைச் சேர்க்கின்றன என்றும், அற்புதமான இந்திய விமானிகள் பாதுகாப்பாக விமானத்தை தரையிறக்கியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ரஷ்யாவில் இருந்து சுகோய் ரக விமானங்கள் இறக்குமதி செய்யப்பட்டு, கடந்த 23 ஆண்டுகளுக்கு பின் இந்தியா மேற்கொள்ளும் மிகப் பெரிய போர் விமான வர்த்தகம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments