Ticker

6/recent/ticker-posts

Ad Code

மத்திய அரசின் தடையை அடுத்து இந்தியப் பிரிவை மூடியது டிக்டாக் நிறுவனம்..! 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாகவும் அறிவிப்பு

சீனாவின் டிக்டாக் நிறுவனம் இந்தியாவில் தனது கிளையை மூடுவதாக அறிவித்துள்ளதால் அதில் பணியாற்றிய 2 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர். பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருந்ததாகக் கூறி டிக்டாக் உள்ளிட்ட ஏராளமான சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இந்நிலையில் டிக்டாக் நிறுவனம் தனது இந்திய ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில், இந்தியாவில் மீண்டும் டிக்டாக் பயன்பாட்டுக்கு வரும் என தாங்கள் நம்புவதாகவும், ஆனால் அதற்கான கால அளவீடு தெரியாததால் இந்தியக் கிளையை மூடுவதாகவும் அறிவித்துள்ளது. டிக்டாக்கின் இந்த முடிவால் அதன் இந்தியப் பிரிவில் பணியாற்றிய 2 ஆயிரம் பேர் வேலையிழந்துள்ளனர்.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments