Ticker

6/recent/ticker-posts

Ad Code

கொரோனா தொற்றுக்குப் பின் முதன்முறையாக மார்ச் 26ம் தேதி வங்கதேசம் செல்கிறார் பிரதமர் மோடி

கொரோனா தொற்றுக்கு பின் முதன்முறையாக பிரதமர் மோடி வரும் மார்ச் மாதம் வங்கதேசம் செல்கிறார். வங்கதேசத்தின் தந்தை எனப்படும் முஜிபுர் ரஹ்மானின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களுக்காக மோடி கடந்த மார்ச் மாதம் வங்கதேசம் செல்லத் திட்டமிருந்தார். ஆனால் பெருந்தொற்று காரணமாக அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் வரும் மார்ச் மாதம் 26ம் தேதி வங்கதேசம் செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தப் பயணத்தின் போது, சிட்டகாங், மோங்லா துறைமுகங்கள் வழியாக பொருட்களை ஏற்றுமதி செய்வது தொடர்பாகவும், நேபாளம், வங்கதேசம் மற்றும் இந்தியா இடையேயான வாகனப் போக்குவரத்து தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் எனக் கூறப்படுகிறது.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments